
இதில் இராணுவத்தினரின் சாகசங்கள், பெண் வீராங்கனைகளின் வாள் சண்டை உள்ளிட்ட சாகசங்கள், நாய்களின் சாகசங்கள், பாலம் நிர்மாணம், பரசூட் சாகசம் என்று பல்வேறு வகையான சாகசக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு மற்றும் சாகசங்கள், கமாண்டோ படையினரின் பணயக் கைதிகளை மீட்கும் போர்ப்பயிற்சி என்பனவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
வடக்கில் நடைபெறும் இராணுவத்தின் முதலாவது சாகசக் கண்காட்சி இதுவாகும். இதனை முல்லைத்தீவு இராணுவக் கட்டளைத் தளபதி ஜகத் டயஸ் ஏற்பாடு செய்துள்ளார்.
கண்காட்சியின் ஆரம்ப நாளான நேற்று முல்லைத்தீவின் முக்கிய படைப்பிரிவுகளின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும்
பொதுமக்கள் பெருமளவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக