சனி, 15 நவம்பர், 2014

மகிந்த அரசு நாட்டைப் பற்றி சிந்திக்கவில்லை சஜித் பிரேமதாச..!!

நாட்டைப் பற்றி சிந்திக்காது தங்களது வாய் வயிற்றை நிரப்ப முயற்சிக்கும் இந்த எதேச்சாதிகார அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற போதிலும் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஆச்சரியமான மாவட்டமாக ஆட்சியாளர்கள் பிரசாரம் செய்யும் அம்பாந்தோட்டை மக்கள் கடுமையான வறுமையில் வாடுகின்றனர்.

மக்களின் வறுமை நிலைமைகளை மூடி மறைத்து போலியான அபிவிருத்தியை பிரசாரம் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது. அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களினால் வறிய கிராம மக்களுக்கு எவ்வாறான நன்மைகள் கிடைத்துள்ளன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக ஆட்சியாளர்கள் வாயையும் வயிற்றையும் நிரப்பிக் கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக