திங்கள், 17 நவம்பர், 2014

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் அமைச்சரவை மாற்றம் கருணாவுக்கும் அமைச்சர் பதவி..!!!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
இதன்போது தற்போதுள்ள சிரேஷ்ட அமைச்சுப் பதவிகள் ரத்துச் செய்யப்பட்டு, குறித்த அமைச்சர்களுக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் அளிக்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக இனம் காணப்பட்டுள்ள பிரதியமைச்சர்கள் சிலர் அமைச்சர்களாக பதவி உயர்த்தப்படவுள்ளனர்.

இதன்போது பிரதியமைச்சர் கருணாவும் அமைச்சுப் பதவியொன்றைப் பெறவுள்ளார்.

அத்துடன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள ஸ்ரீரங்கா உள்ளிட்ட சிலருக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளது.

இவர்களுடன், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நால்வருக்கும் பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறித்த
வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக