செவ்வாய், 23 செப்டம்பர், 2014

மஹிந்த சாதாரண வேட்பாளராக போட்டியிட்டால் மட்டுமே ஆதரவு!- அமைச்சர் வாசுதேவ!!


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சாதாரண வேட்பாளராக போட்டியிட்டால் மாத்திரமே தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்கமுடியும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் மஹிந்த ராஜபக்சவுக்கு பாரிய தடங்கல் எதுவும் இருக்கப் போவதில்லை.

எனினும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் காரணமாகவே
ஊவாவில் வாக்குகள் குறைந்தன என்று நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில சாதாரண வேட்பாளராக மஹிந்த போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வாசுதேவ குறிப்பிட்டுள்ளார்.

ஜே வி பியை பொறுத்தவரை அவர்களின் செல்வாக்கில் மாற்றம் இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக