செவ்வாய், 23 செப்டம்பர், 2014

ரஸ்ய ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்!!

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பினை ரஸ்ய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி புட்டின் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.

மிக நீண்ட இடைவெளியின் பின்னர் ரஸ்ய தலைவர் ஒருவர் இலங்கை;கு
விஜயம் செய்ய உள்ளார்.

புட்டினின் இலங்கை விஜயத்தின் போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக