திங்கள், 22 செப்டம்பர், 2014

வவுனியா பாலமோட்டையை சேர்ந்த பரமேஸ்வரி கந்தையா அவர்களுக்கு இரண்டாம் கட்டமாக உதவி!!


கணவனை இழந்த  பரமேஸ்வரி கந்தையா அவர்கள் வவுனியா பாலமோட்டையில் வசித்துவருகின்றார். இவரின் மகன் கந்தையா குருபரன், முன்னாள் போராளி ஆவார். இவர் கடந்த 6 வருடங்களாக தடுப்பு முகாமில் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பரமேஸ்வரி கந்தையா அவர்கள் தனது வீட்டுக் கூரைகளுக்காக தகரங்களை தந்துதுவுமாறு  வவுனியா நகரசபை  முன்னைநாள் உப நகரபிதாவும் ஜனநாயக மக்கள்
விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு.க.  சந்திரகுலசிங்கம் அவர்களிடம் கேட்டுக் கொண்டதிற் கிணங்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழங்கி வைக்கப்படன.

பரமேஸ்வரி கந்தையா அவர்களுக்கு கால்கள் இயலாமல் மிகுந்த கஷ்டத்தில் உள்ளதாக தடுப்பு முகாமில் உள்ள  கந்தையா குருபரன், வட மாகாண சபை உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடன் தொடர்புகொண்டு தனது தாய்க்கு  உதவுமாறு கேட்டிருந்தார்.

தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க  வவுனியா நகரசபை  முன்னைநாள் உப நகரபிதாவும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் அவர்கள்   நிதியுதவியை வழங்கி வைத்தார்.

பரமேஸ்வரி கந்தையா அவர்கள் தெரிவிக்கையில்,எனது மகன் குருபரனை மீட்டுத்தருமாறும் அன்றாடத் தேவைகளுக்காக தண்ணீர் இல்லை எனவும்,குழாய்க்கிணறு அல்லது கிணறு  ஒன்றை அமைத்து தருமாறும் கேட்டுக்கொண்டார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக