
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரான சிறிசேன ஹேரத் என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு அனுராதபுரம் சுவாஸ்திபுர பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த என்.டி.என். ஜயவர்தன என்பவரின் மனைவியான கல்யாணி ஜயவர்தன என்பவருக்கு நட்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
விபத்தை மேற்கொண்டமைக்காக நட்டஈடாக ஒன்றரை லட்ச ரூபா வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திட்டமிடாத மனிதக் கொலை மற்றும் கவனயீனமான வாகன செலுத்துகை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக முறையே 4000 மற்றும் 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த முன்hனள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே உயிரிழந்தவரின் மனைவிக்கு மூன்றரை லட்ச ரூபா நட்ட ஈடு செலுத்தியுள்ளார்.
வாகன அனுமதிப்பத்திரத்தை ரத்துச்செய்யப் போவதில்லை என நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக