புதன், 20 ஆகஸ்ட், 2014

ஜனாதிபதி ஆணைக்குழுக்களிற்காக 27 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது அரசாங்கம்....!!!

இலங்கையில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிற்காக 27 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
2005ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் 17 ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுனாமி அழிவு, வற் வரி மோசடி, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை,  முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரேவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்,  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற 17 விசாரணைக் குழுக்களுக்காக இந்தப் பணம் செலவிடப்பட்டுள்ளது.



ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

பிரதமரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆளும் கட்சியின் பிரதம கொறடா என்ற ரீதியில் தினேஷ் குணவர்தன தகவல்களை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக