புதன், 20 ஆகஸ்ட், 2014

பொதுபல சேனாவிற்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சவால்....!!!!

பொதுபல சேனா அமைப்பிற்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சவால் விடுத்துள்ளார்.
அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அதனை சந்திக்கு சந்தி சென்று கூறுவதில் பயனில்லை.

ஊழல் மோசடிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டிருந்தால் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய வேண்டும். அல்லது நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும்.

குற்றம் செய்யும் அமைச்சர் ஒருவருக்கு எதிராக எவரும் முறைப்பாடு செய்ய முடியும்.

குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது ஜனநாயக ரீதியான உரிமையாகும்.


எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால் என்னை வீட்டுக்கு அனுப்புமாறு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு சவால் விடுகின்றேன்.

பொதுபல சேனாவிற்கு எதிராக கருத்து வெளியிடும் அமைச்சர்களை இலக்குவைத்து மட்டும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை பொதுபல சேனா முன்வைக்கின்றது.

குற்றச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு அமைச்சருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக