
மத்திய கிழக்கின் முன்னணி செய்தி நிறுவனமான அரப் நியூஸ் பத்திரிகை இது தொடர்பில் புலனாய்வுச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வரும் பயணிகள் மற்றும் அப்பாவித் தோற்றம் கொண்ட பயணிகளின் உடைமைகளைத் திருடுவதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது.
விமானப் பயணிகளின் உடைமைகள் விமானத்திலிருந்து எடுத்து வரப்படும் போதே இவ்வாறு திருடப்பட்டு விடுவதாகவும் அரப் நியூஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொபைல் போன் உள்ளிட்ட இலெக்ட்ரோனிக் பொருட்களே பெருமளவில் இவ்வாறு திருடப்படுவதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி காரணமாக சர்வதேச மட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பெயர் கடுமையான முறையில் அசிங்கப்பட்டுள்ளது.
எனினும் விமான நிலைய அதிகாரிகள் இது தொடர்பில் தொடர்ந்தும் உதாசீனப் போக்குடன் செயற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக