புதன், 6 ஆகஸ்ட், 2014

கச்சதீவு விவகாரத்தில் நேரடியாக தலையிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம்..!!!

கச்சதீவு விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
 கச்சதீவு விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.

கச்சதீவு பகுதியில் இந்திய மீனவர்களின் உரிமை பற்றி விளக்கம் அளிக்க கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, கச்சத்தீவில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை என்று கூறி இருந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.



அப்போது, கச்சதீவு விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், கைது பற்றி பேச்சு மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் என்று கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக