புதன், 6 ஆகஸ்ட், 2014

157 தமிழர்களையும் நவுரு முகாமுக்கு அனுப்பியதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்...!!!

கடந்த சனிக்கிழமை குடிவரவு அமைச்சர் மொரிசனும் பிரதமர் டோனி அபேட்டும் சேர்ந்து அப்பாவி 157 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இரவோடு இரவாக நவுரு தடுப்பு காவலுக்கு அனுப்பியதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அகதிகளுக்காக செயற்படும் அமைப்பு [Refugee Action Coalition Sydney ] ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அகதிகள் செயற்பாட்டாளரான இயன் ரிண்டோல்,

புகலிடக் கோரிக்கையாளர்களின் வழக்குகள் நீதமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இவர்களை யாருக்கும் தெரியாமல் இந்தியாவுக்கு அனுப்ப முயற்சி செய்துள்ளனர்.

அது மட்டுமன்றி சிறுவர்களது பாதுகாப்பு மற்றும் சுகாதாரங்கள், மன நிலைகள் மிகவும் பாதிப்படைந்திருக்கின்றது. இவர்களுக்கு இந்த அரசாங்கம் நல்ல ஒரு தீர்வினை வழங்க வேண்டும்.



உள நல மருத்துவர்கள் சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிட்ட தரவினையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட மொரிசனின் அடிமட்ட தனமான கொள்கையை கைவிட வேண்டும்.

அப்பாவி தமிழர்களை வைத்து அரசியல் நடத்தும் விடயத்தினை கைவிட்டு இவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டமானது எதிர்வரும் வெள்ளிக் கிழமை சிட்னி லீ ரோட் இல் உள்ள குடிவரவு திணைக்களத்துக்கு முன்பாக இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக