புதன், 6 ஆகஸ்ட், 2014

இலங்கை மீதான ஐ.நா விசாரணை தொடங்கியது - குற்றச்சாட்டுகள் மற்றும் சாட்சியங்களைச் சமர்ப்பிக்கலாம்...!!!

நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
குற்றச்செயல் நடந்த காலம்: 21.02.2002 முதல் 15.11.2011 வரை. (இதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அதுகுறித்தும் புகார் தெரிவிக்கலாம்).

புகார் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.10.2014. (அக்டோபர் மாதம் 30 ஆம் நாளுக்கு முன்னதாக புகார்களை அனுப்ப வேண்டும்)

புகார்களை ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் மொழியிலும் அனுப்பி வைக்கலாம்.

அனுப்பவேண்டிய முகவரி:

மின்னஞ்சல் மூலம் அனுப்ப: OISL_submissions@ohchr.org

அஞ்சல் மூலம் அனுப்ப:


OISL
UNOG-OHCHR
8-14 Rue de la Paix
CH-1211 Geneva 10
Switzerland

புகார்கள் அனைத்தும் 10 பக்கங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

காணொளிகள், நிழற்படங்கள், ஒலிப்பதிவுகள் போன்ற வடிவில் ஆதாரங்களை அனுப்பி வைக்க விரும்புபவர்கள் முதலில் மின்னஞ்சல் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயலகத்துடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை உரியவர்கள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக