புதன், 20 ஆகஸ்ட், 2014

கச்சதீவு விவகாரம்! கருணாநிதி, ஜெயலலிதாவின் மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி..!!!!

கச்சதீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்கவேண்டும் என்று கோரி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை ஒன்றாக விசாரணை செய்ய இந்திய உயர்நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது.
கருணாநிதியின் சார்பில் சட்டத்தரணி வெங்கடாரமணியும் ஜெயலலிதாவின் சார்பில் மேலதிக சட்டமா அதிபர் சுப்பிரமணியம் பிரசாத்தும் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

கச்சதீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்து விட்டது.


இந்தநிலையில் கச்சதீவை இலங்கையிடம் கையளித்தமைக்கான எவ்வித உத்தியோகபூர்வ ஆவணங்களும் இல்லை என்றும், இராமநாதபுரத்தை ஆட்சி செய்த ஸாமின்டரியின் கடிதத்தின்படி 1921ம் ஆண்டு காலப்பகுதியில் கச்சதீவு இந்தியாவின் எல்லையுரிமையை கொண்டிருந்தது என்றும் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் தங்கள் மனுக்களில்  குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்தே குறித்த இருவரின் மனுக்களையும் ஒருசேர விசாரிக்க இந்திய உயர்நீதிமன்றம் நேற்றையதினம் அனுமதியளித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக