
இலங்கையில் அடைக்கலம் பெற்றுள்ள பாகிஸ்தானியர்களை இந்திய அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் நாடு கடத்தும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு செய்தியாளர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நடத்திய சந்திப்பின்போதே உடனிருந்த வெளியுறவு அமைச்சர் இந்தக் கருத்தை குறிப்பிட்டார்.
தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்கெத் துதரகம், பெங்களுரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றை தாக்குவதற்கு திட்டமிட்டதாக கூறி இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த இலங்கையரை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகமே இயக்கியது என்ற குற்றச்சாட்டை அடுத்தே அகதி அடைக்கலம் பெற்றுள்ள சந்தேகத்துக்குரிய பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக