புதன், 6 ஆகஸ்ட், 2014

கே.பிக்கு எதிரான வழக்கு மீதான தீர்ப்பு: திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக இலங்கையில் உள்ள குமரன் பத்மநாதனை அழைத்து விசாரிக்க கோரிய வழக்கின் தீர்ப்பு திகதி குறிப்பிடப்படாமல் சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளராக செயற்பட்ட கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பு உள்ளதாகவும் அதனை விசாரிக்குமாறும் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் பொலிஸ் அதிகாரி மோகன்ராஜ் என்பவரே சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாபன் தற்போது இலங்கையில் உள்ளதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இன்று குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். கே. கவுல், நீதிபதி சத்திய நாராயணன், அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்தனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக