ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் நிர்மாண மற்றும் பொறியியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஞாயிறன்று அறிவிக்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.தேசிய சுத்திர முன்னணி முன்வைத்துள்ள 12 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததையடுத்தே முன்னணிக்கு முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
தமது நிலைபாடு தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி அறிவிப்பதற்கு முன்னணி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக