சனி, 5 ஜூலை, 2014

இந்தோனேசியாவில் கடனட்டை களவு! இலங்கையர்கள் இருவர் உட்பட மூவர் கைது....!!!

ஏ.ரி.எம். இலத்திரனியல் அட்டைகளைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் இருவர் உட்பட மூவர் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் இந்தோனேசிய பெண்ணாவார். இவர் கைதுசெய்யப்பட்ட ஆண்களில் ஒருவரின் மனைவியாவார்.

கைதான ஆண்கள் சிவா மற்றும் ரஞ்சன் என்று அடையாளம் காணப்பட்டள்ளதாக இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரகசிய கமராக்கள் மற்றும் விசேட சாதனங்களைப் பொருத்தி இலத்திரனியல் அட்டைகளின் தகவல்களைப் பெற்று அவற்றின் ஊடாக போலியான அட்டைகளைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஏடிஎம் தன்னியக்க இயந்திரத்தில் இருந்து 3.9 பில்லியன் மெரிக்க டொலர்களை களவாடிய குற்றத்துக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தோனேசியாவுக்கு கணினி தொடர்பாக சாதனங்களை அனுப்பும் கனேடிய பிரஜைகளுடன் இவர்கள் தொடர்புகளை வைத்திருந்ததாகவும், அவர்களிடமிருந்து பெறப்பட்ட சாதனைத்தைக் கொண்டே இலத்திரனியல் அட்டையிலுள்ள தகவல்களை இரகசியமாகப் பிரதிபண்ணப் பயன்படுத்தியதாகவும் இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மூவரும் கடந்த ஜூலை முதலாம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து 260 கடன் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

களவாடிய பணத்தை கொண்டு இவர்கள் கார்ää இரண்டு வீடுகள் மற்றும் கோழிப்பண்ணை ஆகியவற்றுக்கு உரிமையாளர்களாக இருந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் இருவரும் சர்வதேச புலம்பெயர் அமைப்பான ஐஓஎம்மின் பாதுகாப்பிலேயே இந்தோனேசியாவில் தங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக