சனி, 5 ஜூலை, 2014

முகமாலையில் இன்றும் இரண்டு எலும்புக் கூடுகள் மீட்பு...!!

யாழ்.முகமாலைப் பகுதியில் இருந்து இன்றும் இரண்டு எலும்புகளின் எச்சங்களும், நீர் அள்ளும் கான் மற்றும் காலணியொன்றும் மீட்கப்பட்டதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

முகமாலை முன்னரங்கப் பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்கள் நேற்று முன்தினம் எலும்புக்கூடு ஒன்று இருப்பதை அவதானித்து பளைப் பொலிஸாரிற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அவ்விடத்திலிருந்து நேற்று முன்தினம் ஒரு எலும்புக்கூடும் நேற்று இரண்டு எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டன.

அத்துடன், விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ சீருடை மற்றும், 10 மகஸீன்கள், 6 கைக்குண்டுகள் ஆகியனவும் நேற்று மீட்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் தேடுதல் நடவடிக்கையில், அப்பகுதியில் மேலும் பல எலும்பு கூடுகள் இருக்கலாம் எனப் பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.


அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக