வியாழன், 17 ஜூலை, 2014

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத் துறைக்கு நிதியுதவி!!! (படங்கள் இணைப்பு)

கோவில்குளம் இளைஞர் கழகத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி நிதியிலிருந்து, வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி  மாணவர்களின் இவ் வருட மாகாண  மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒருதொகைப்பணம் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் கல்லூரியின் அதிபர் திருமதி ஜி.நடராஜா அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 

இவ் நிகழ்வில் இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் திரு கு.நிரஞ்சன், கோவில்குளம் இளைஞர் கழகத்தினைச் சேர்ந்த சுரேஷ்குமார், சுரேஷ், காண்டீ, சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக