ஞாயிறு, 6 ஜூலை, 2014

ஜனாதிபதி மஹிந்தவினால் இராணுவத்தினருக்கு வீடுகள் கையளிப்பு...!!!!

நமக்காக நாம் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இராணுவத்தினருக்குநேற்று வழங்கி வைத்தார்.
அநுராதபுரத்தில் முப்படையினருக்காகக் கட்டப்பட்ட 104 வீடுகளை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

இத்திட்டத்தில் இராணுவத்தினருக்காக 68 வீடுகளும் விமானப்படையினருக்காக 23 வீடுகளும் கடற்படையினருக்காக 13 வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வீடுகளை கையளித்த பின்னர் ஜனாதிபதி ஹெரவப்பொத்தான ரன்வெலி மத்திய மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்து மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை கையளித்தார்.


இந்த நிகழ்வில் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக