சனி, 5 ஜூலை, 2014

யாழ் பல்கலைக்கழக மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த முடிவு சரியானதா?? ஒரு கண்ணோட்டம்!!

தற்கொலை தீர்வாகுமா?

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும் சுழன்று தாக்க வாழ்க்கையே சோகமாகி சுட்டெரிக்கும் பாலைவனமாக மாறிவிடுவதும் உண்டு. ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான், தனக்கு பிரச்சினையே வரக்கூடாது மற்றும் உலகின் சகல சுகமும் ஒருங்கே பெற்று இன்பத்தில் உலா வரவேண்டும் என்று, அதுதான் மனித இயல்பும்கூட. வெளி
உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தடுக்கப்பட்ட செயலைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர்.

தற்கொலை முனைப்பு: எதிர்பாராத இழப்பு, கோபம், வெறுப்பு ஏற்படுத்தும் ஓர் உணர்ச்சிவசப்பட்ட உந்துதல்தான் தற்கொலை முனைப்பு. அந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சட்டென்று நிகழ்த்தப்படுவதே தற்கொலை. தற்கொலை முனைப்பும், உணர்ச்சியும் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது, திடீரென ஒரு நண்பரோ, உறவினரோ வந்துவிட்டால், அந்த முனைப்பும், உணர்ச்சியும் தணிந்துவிடும். தற்கொலையும் நின்று விடும். நண்பரோ, உறவினரோ சென்றபின் அந்தத் தற்கொலை முனைப்பு மறைந்துவிடும். அவர் நினைத்தால்கூட தற்கொலை முயற்சி வராது. எனவே, தற்கொலை முடிவு என்பது நொடிப்பொழுது உணர்ச்சி உந்தலின் விளைவாகும். தற்கொலை அந்த உணர்ச்சி வேகத்தில் செய்யப்படுவதாகும்.

எனவே, தற்கொலை முனைப்பு வரும்போது தனிமையைத் தவிர்த்து, பலர் மத்தியில் வந்துவிட வேண்டும். தற்கொலையின் விளைவுகள் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்தித்தால் அவர்கள் முடிவு அவர்களுக்கே முட்டாள் தனமானதாகப்படும்.

ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்க அவர்கள் பெற்றோர் பட்ட பாட்டை தற்கொலைக்கு முயலும் பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும், தாங்கள் இறந்தபின் பெற்றோர் என்ன பாடுபடுவார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நம்மை வளர்த்த பெற்றவர்களுக்கு இப்படியொரு துன்பத்தை, சோகத்தை, கவலையை, இழப்பைத் தரலாமா? பிள்ளைகள் சிந்திக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக