ஞாயிறு, 6 ஜூலை, 2014

பம்பலப்பிட்டியில் கடுகதி ரயில் தடம்புரண்டது! 3 பேர் காயம்...!!!!

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ராஜரட்ட ரஜினி கடுதி கதி ரயில் இன்று மாலை பம்பலப்பிட்டி பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளது.
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் கடுகதி ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ் விபத்தின் காரணமாக கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக