வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் கஞ்சா செடி பயிரிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் கஞ்சா பயிரிடப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை நேற்று வியாழக்கிழமை கைது செய்தனர். இவர் தனது வீட்டுத் தோட்டத்தில் 25 அங்குலம் உயரமுள்ள 150 கஞ்சா செடிகளை வளர்த்திருந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கஞ்சா செடிகளையும் வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக