காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் முல்லைத்தீவில் ஆரம்பமாகவுள்ளது.இந்த அமர்வு எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் எட்டாம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஆம் 6 ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும் 7ஆம் 8 ஆம் திகதிகளில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிலும் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்த ஆணைக்குழுவின் அமர்வுகள் ஏற்கனவே கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.
இதன்போது மட்டக்களப்பில் 195 முறைப்பாடுகளுக்கு புறம்பாக 216 புதிய முறைப்பாடுகள் கிடைத்தன.
இதேவேளை ஆணைக்குழுவுக்கு இதுவரை 18789 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவற்றில் ஐயாயிரம் முறைப்பாடுகள் பாதுகாப்பு தரப்பில் இருந்து கிடைத்தவையாகும்.
இந்த ஆணைக்குழு 14 ஆகஸ்ட் 2013 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இது 1990 ஜூன் 10 திகதி முதல் 2009 மே 19 திகதி வரையில் இடம்பெற்ற காணாமல் போதல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் அதிகாரத்தை கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக