புதன், 2 ஜூலை, 2014

நல்லிணக்க பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் கோரிக்கை...!!!

இலங்கையில் ஸ்திரதன்மையையும் சமாதானத்தையும், ஏற்படுத்த வேண்டுமாயின் இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விசாரணைக் குழுவினரை நியமித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் நல்லிணக்க பரிந்துரைகளை முழுமையாக அமுல்செய்ய முன்வர வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் பிரசல்ஸில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுவே இலங்கையில் நிரந்தரமாக அமைதியை கொண்டு வரும் என்றும் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக