புதன், 7 மே, 2014

இன்று அதிகாலை இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன..!!!!!!

களுத்துறை அளுத்கம ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

அளுத்கம ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் ரயிலுடன் சிலாபம் நோக்கி புறப்பட்ட ரயிலே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.50
மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ரயில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில் பெட்டிகள் சில தடம்புரண்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், விபத்துக் காரணமாக தென் கரையோர ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக