மாணவர்களை டொலர்களுக்குப் பணயம் வைக்கும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச , இந்த நடவடிக்கைகளுக்கு தூதரகங்களும் நிதி உதவி வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் தலாவ மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வுகூடத்தை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து
தெரிவிக்கையில்,
மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து அவர்களை தவறான வழிக்கு திசைதிருப்பும் நடவடிக்கைகள் வெளிநாட்டுத் தூதரகங்களின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம். மாணவர்களை தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்குப் பலியாக்க வேண்டாம்.
கொழும்பில் சிலருக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த கல்வி முறையை நாம் அனைத்துக் கிராமங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளோம். இதன் பயனாக கிராமத்திலுள்ள மாணவர்களும் தற்போது உலகளவில் தமது திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கம் என்ற வகையில் நாம் கிராமிய கல்வித் துறைகளை முன்னேற்றி வருகையில் சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். நாம் கிராமம் நகரம் என்று எந்த மாணவர்களையும் பிரித்துப் பார்ப்பதில்லை. அதேபோன்று வடக்கு தெற்கு மலையகம் என்றும் பேதப்படுத்திப் பார்ப்பதில்லை.
வடக்கில் பிள்ளைகள் திசை திருப்பப்பட்டதைப் போன்று தெற்கு பிள்ளைகளும் திசைதிருப்பப்பட்ட யுகம் ஒன்றிருந்தது. எவரது டொலர்களுக்கும் வேறு விதங்களில் செயற்படும் சக்திகளுக்கும் எமது பிள்ளைகளை அடிமைப்படுத்த முடியாது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். பெற்றோர்களும் ஆசிரியர்களும் கல்விமான்களும் இது விடயத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக