வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு கவனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் இதனை உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அரசாங்கம் எந்த வகையான தேர்தலை நடத்தினாலும்ää அதற்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு தமிழ்
தேசிய கூட்டமைப்பு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா நடத்தப்படும் என்பதே தற்போது இலங்கை அரசியலில் முக்கிய விவாதமாக காணப்படுகிறது.
பெரும்பாலும் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த வகையான தேர்தலானாலும்அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நலன் கருதி செயற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி அவசியம் - மனோகணேசன்
இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் மக்கள் அரசியல் விழிப்புணர்ச்சியை பெற வேண்டும் என்று, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறவுள்ளன.
சிங்கள மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படவுள்ள நிலையில், தமிழ் மக்களே தீர்மானிக்கும் சக்திகளாக காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் அரசியல் விழிப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக