மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இன்றுடன் 60 நாட்களாகியும் எந்த தகவ்லும் இல்லை. இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
ஆஸ்திரேலியா,அமெரிக்க போர்விமானங்கள்,போர்கப்பல்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் மாயமான விமானம் குறித்து அமெரிக்காவில் சிஎனென் ஓஆர்சி நிறுவனங்கள் ந்டத்தியது. விமானம் எவ்வாறு மாயமாகி இருக்கும் என பொதுமக்களிடம் ஒரு சர்வே எடுத்தது. இந்த சர்வேயில் சில அதிர்ச்சிகரமான முடிவுகளும் கூறப்பட்டுள்ளன. அமெரிக்காவில் சர்வேயில் கலந்து கொண்ட பத்தில் ஒருவர், விமானம் மாயமானதற்கு வேற்றுகிரகவாசிகள்தான் காரணம் என பதிலளித்துள்ளனர்.
மாயமான விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என பலர் கூறியுள்ளனர். மேலும் சிலர் விமானம் கடலில் விழுந்திருப்பதாக தாங்கள் நம்பவில்லை என்றும், விமானத்தை பைலட்டுகள் கடத்தியிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.79 சதவீத அமெரிக்கர்கள் விமானத்தில் உள்ளவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறி உள்ளனர். 9 சதவீதம் பேர் பேற்று கிரகவாசிகள் கடத்தி இருக்கலாம் என கூறி உள்ளனர்.
மாயமான விமானத்தை கண்டுபிடிக்க இதுவரை மலேசிய அரசு 3.1 பில்லியன் டாலர் பணத்தை செலவழித்துவிட்டதாகவும், இருந்தும் விமானம் குறித்து தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளது. மலேசிய விமானம் மாயமானதற்கு இன்னும் விடைகிடைக்காமல் தவித்துக்கொண்டு வருகிறது மலேசிய அரசு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக