நாடாளுமன்ற தேர்தலையா அல்லது ஜனாதிபதி தேர்தலையா முதலில் நடத்துவது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய கூட்டத்தில் ஆராய்ந்து இறுதி முடிவு எட்டப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தவுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள், மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆராயவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறும் என்றும் அதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற தேர்தலையா அல்லது ஜனாதிபதி தேர்தலையா முதலில் நடத்துவது என்பது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராய்ந்து இறுதி முடிவு எட்டப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஊவா மாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஒக்டோபருக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக