கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 70 சதவீதமானவை அமுல்படுத்தப்பட்டுவிட்டன. இதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டதென ஆளும் கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று சபையில் தெரிவித்தார்.
இன்று மேற்குலக நாடுகளிலும் நல்லாட்சி எழுத்தில் மட்டும்தான் உள்ளது. ஒருபோதும் அது நடைமுறையில் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (08.05.2014) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐ.தே.கட்சி எம்.பி சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக