இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற சில இளைஞர், யுவதிகள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர்.
தமது நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக நாடு திரும்ப முடியாது என தெரிவித்துள்ளனர்.
சில நாடுகளைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகளின் இந்த நடவடிக்கை, இளைஞர் விவகார அமைச்சுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா, உகண்டா மற்றும் கிரிபானி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 06 பேர் இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர்.
நாடுகளில் நிலவிரும் பிரச்சினைகள், இன, மத முரண்பாடுகள் போன்ற
காரணிகளினால் மீளவும் நாடு திரும்ப முடியாது என தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, நாடு திரும்ப முடியாது எனவும் இலங்கையில் தங்க அனுமதிக்குமாறும் கோரிய இருவரை, பாதுகாப்புத் தரப்பினர் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வீசா காலம் பூர்த்தியானதன் பின்னர் எவரும் நாட்டில் தங்க முடியாது எனவும் அவர்கள் நாடு கடத்தப்படுவர் எனவும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசியல் தஞ்சம் கோரியவர்கள் எதிர்வரும் நாட்களில் நாடு கடத்தப்பட உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக