செவ்வாய், 13 மே, 2014

கடத்தப்பட்ட மாணவிகளைக் காட்டும் புதிய வீடியோ வெளியானதுடன், கடத்தப்பட்ட இடம் தமக்கு தெரியும் என நைஜீரியா போர்னோ மாநில கவர்னர் தெரிவிப்பு !!!

நைஜீரியாவில் கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பெண்பிள்ளைகளைக்காட்டும் புதிய வீடியோ ஒன்றை அந்நாட்டின் இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான போக்கோ ஹராம் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான்கு வாரங்களுக்கு முன் கடத்தப்பட்டிருந்த பாடசாலை மாணவிகள் இவர்கள் என்று நம்பப்படுகிறது.

பாடசாலையிலிருந்து காணாமல்போன பெண் பிள்ளைகள் இவர்கள் என்றும், தடுத்துவைக்கப்பட்டுள்ள போக்கோ ஹராம் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டால்தான் இப்பிள்ளைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் போக்கோ ஹராம் தலைவரான அபூபக்கர் ஷெகாவு நிபந்தனை விதித்துள்ளார்.


தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர் இந்த மாணவிகள் இஸ்லாத்துக்கு மாறிவிட்டனர் என்று அவர் கூறினார். இப்பெண்கள் தலைத்துண்டும் மேலங்கியும் அணிந்து இந்த வீடியோவில் காணப்பட்டிருந்தனர்.

நாட்டின் வடகிழக்கில் சிபொக் என்ற ஊரிலுள்ள தங்கிப் படிக்கும் பள்ளி ஒன்றிலிருந்து இவர்கள் கொண்டுசெல்லப்பட்டிருந்தனர்.

போக்கோ ஹராமை எதிர்ப்பதற்கான வழிகள் குறித்து ஆராய்வதற்காக, வரும் சனிக்கிழமை கூட்டம் ஒன்றை நடத்த பிரஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லோந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை தற்போது அந்த மாணவிகளை கடத்தி வைத்திருக்கும் இடம் தமக்கு தெரியும் என அந்நாட்டின் போர்னோ மாநில கவர்னரான காஷிம் ஷெட்டிமா கூறியுள்ளார்

நைஜீரியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் போகோ ஹரம் தீவிரவாதிகளால் பள்ளி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். அவர்களில் சில மாணவிகள் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி ஓடி வந்துவிட்டனர். இன்னும் 200 மாணவிகள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க பல்வேறு உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தற்போது அந்த மாணவிகளை கடத்தி வைத்திருக்கும் இடம் தமக்கு தெரியும் என அந்நாட்டின் போர்னோ மாநில கவர்னரான காஷிம் ஷெட்டிமா கூறியுள்ளார். அவர் கடத்தப்பட்டுள்ள மாணவிகளை பார்த்தாக பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தான் பார்த்தது அம்மாணவிகளை தானா என உறுதி செய்யுமாறு நைஜீரிய ராணுவத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தீவிரவாதிகள் அம்மாணவிகளை கேமருன் அல்லது சாட் எல்லையை தாண்டி கடத்திச்சென்றுவிடவில்லை என ஷெட்டிமா தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 14-ந் தேதி கடத்தப்பட்ட மாணவிகளின் நிலை என்னவானது என அவர்களின் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தீர்வு காண்பது குறித்து விவாதிக்க வருமாறு நைஜீரிய மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு பிரெஞ்சு அதிபர் பிராங்கோய்ஸ் ஹொல்லாண்டே அழைப்பு விடுத்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக