செவ்வாய், 13 மே, 2014

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் கணித பாடத்தில் மாணவர்கள் சித்தியெய்தாமை குறித்த ஆராய்வதற்கு பத்து பேர் அடங்கிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது....!!!!!!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் கணித பாடத்தில் மாணவர்கள் சித்தியெய்தாமை குறித்த ஆராய்வதற்கு பத்து பேர் அடங்கிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நேற்று இந்தக் குழு நிறுவப்பட்டது.

சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் லட்சக் கணக்கான மாணவர்கள் சித்தியடைவதில்லை.

மாணவர்கள் கணித பாடத்தில் பின்னடைவை எதிர்நோக்குவதற்கான காரணஙகளை கண்டறிந்து 60 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஊவா வெல்லஸ்ஸ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இந்த ஆணைக்குழுவின் இணைத் தலைவர்களாக நியமிக்கபட்டுள்ளனர்.

2013ம் ஆண்டில் 112000 மாணவர்கள் கணித பாடத்தில் சித்தியடையவில்லை எனவும் இதனால் அவர்களினால் உயர்கல்வியைத் தொடர முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக