சனி, 10 மே, 2014

சிவனொளிபாத மலை விரைவில் புனிதப் பிரதேசம் ..!! அரசாங்கம் அறிவிப்பு

சிவனொளிபாத மலைப் பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மஸ்கெலியா நல்லதண்ணீர் பிரதேசத்தில் சிவனொளிபாத மலை அமைந்துள்ளது.

ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரையில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செய்கின்றனர்.


சிவனொளிபாத மலையை புனிதப் பிரதேசமாக பிரகடனம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இதற்காக விசேட குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இங்கு வரும் யாத்திரிகர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக