
வவுனியா, இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்டதே பாரதிபுரம். இது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமம். 217 குடும்பங்கள் வசிக்கும் இக் கிராமத்தில் 17 குடும்பங்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இந்தியா சென்று தற்போது மீளவும் குடியேறியுள்ள குடும்பங்கள். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் கொட்டும் மழைக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.
நாட்டில் யுத்தம் தீவிரம் பெற்ற காலப்பகுதியில் 1990 ஆண்டளவில் இந்தியா சென்ற இக் குடும்பங்கள் யுத்தம் முடிவடைந்ததும் தமது சொந்த மண்ணில் நிம்மதியாக இனியாவது வாழலாம் என்ற எதிர்பார்புடன் 22 வருடங்களின் பின்னர் வந்துள்ளனர். ஆனால் இந்தியாவின் அகதி முகாம் வாழ்கையைவிட தமது நிலை இப்போ மோசமாக இருக்கிறது என்கின்றனர் அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக