வியாழன், 8 மே, 2014

செயலிழந்து போன மன்னார் மாந்தை இலுப்பைக்கடவை கிராம அபிவிருத்திச் சங்கம்!!! பார்வையிட்டார் அமைச்சர் டெனிஸ்வரன்.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இலுப்பைக்கடவை கிராம அபிவிருத்திச் சங்கம் நீண்ட காலமாக பொதுக் கூட்டங்கள் புதிய நிர்வாகத் தெரிவுகள் நடத்தாதும் கணக்குகளை சமர்ப்பிக்காதும் இயங்காத நிலையில் இருந்துள்ளது. இவ் விடயத்தினை இலுப்பைக்கடவை மக்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்ருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து 05-05-2014 அன்று அக்கிராமத்துக்கு நேரடி விஜயம் செய்த வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அக்கிராம மக்களுடன் கலந்துரையாடி பல்வேறு விடயங்களை அறிந்துகொண்டார்.

அதில் சங்கப்பொருளாளர் 2 வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுவிட்டார் என்றும் இதுவரை தங்களுக்கு எந்த கணக்குகளும் காட்டப்படவில்லை என்றும் முறையிட்டனர். இக்கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகம் நீண்ட காலமாக பொதுக் கூட்டங்களையோ கணக்கறிக்கைகளையோ இக்கிராம மக்களுக்கு சமர்ப்பிக்காது இருந்து வந்ததோடு புதிய நிர்வாகத்தையும் இது வரை தெரிசெய்யவில்லை.

இதை அறிந்து அக்கிராம அலுவலகரும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரும் பல தடைவைகள் முயற்சி செய்தும் பொதுக்கூட்டத்தை நடத்த முடியாமல் போயுள்ளது. பின்னர் இவ்விடயம் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அதனை அடுத்து அவர் அங்கு நேரில் சென்று மக்களுடன் கலந்த்துரையாடி பிரச்சனைகளை ஆராய்ந்த்ததுடன், அபிவிருத்தி தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளார். அத்துடன் இம்மாதம் 25ஆம் திகதி பொதுக்கூட்டத்தை கூட்டி புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரை பணித்ததுடன், அதற்க்கு முன்னர் பழைய நிர்வாகத்தின் கணக்குகளை சீர் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அத்துடன் இலுப்பைக்கடவை மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார். அங்கு அவர் உரையாற்றுகையில் பொது மக்களின் பொதுத் தேவைக்குரிய பொதுப் பணங்களை தனி நபர்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், ஏற்க்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட விடயங்களையும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் பல கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இயங்காதும், பொதுக் கூட்டங்களைக் கூட்டி புதிய நிர்வாகம் தெரிவு செயப்படாமலும் உள்ளது. இதே போன்று வட மாகாணம் முழுவதும் பல சங்கங்கள் காணப்படுகின்றது.

இவ்வாறான சங்கங்களை உடனடியாக புனரமைப்புச் செய்ய கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும், நாட்டின் முதுகெலும்பான இக்கிராம மட்ட அமைப்புக்களை சீராக இயங்க அனைத்து கிராம மக்கள் மற்றும் அதிகாரிகளும் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதோடு, இனிவரும் காலங்களில் இவ்வாறான குறைபாடுகள் அல்லது நிர்வாகச் சீர்கேடுகள் கண்டறியப்பட்டால் இவ்வாறான சங்கங்களை ஒழுங்காக நடாத்திச் செல்லத் தவறியமைக்காக அதிகாரிகளுக்கு எதிராக முதல் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக