சனி, 10 மே, 2014

சீனாவுடனான வியட்நாமின் பிணக்கில் வியட்நாமின் பக்கமாம் இலங்கை!!

கடலில் எண்ணெய் அகழ்வது தொடர்பாக சீனாவுக்கும் வியட்நாமுக்கும் உள்ள பிணக்கில் இலங்கை, வியட்நாமின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறதாம் வியட்நாமுக்கு விஜயம் செய்திருக்கும் இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ண இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் என வியட்நாம் பிரதமரின் அலுவலகம் தெரிவித்திருக்கின்றது. வியட்நாமின் இறைமைக்கு உட்பட்டதும் அதன் விசேட பொருளாதார வலயத்திற்குள் அமைவதுமான கடற்பிரதேசத்தில் சீனா எரிபொருள் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வருவதாக வியட்நாம் குற்றம் சுமத்தி வருகின்றது.

ஐ.நாவின் 1988 ஆம் ஆண்டின் கடல் சட்டப் பிரகடனத்திற்கு அமைவாக இந்தப் பகுதியிலிருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும் என வியட்நாம் வலியுறுத்தி வருகின்றது. வியட்நாமுக்கு விஜயம் செய்திருக்கும் இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ண அங்கு வியட்நாம் பிரதமர் நிகுஜென்ரன் டங்க் நேற்றைய தினம் அளித்த வரவேற்பில் உரையாற்றுகையில் வியட்நாமின் மேற்படி நிலைப்பாட்டுக்கு முழு ஆதரவு வழங்கினார் என வியட்நாம் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இத்தகைய பிணக்குகள் சர்வதேச சட்டத்திற்கு அமைவாக அமைதியாக கையாளப்பட வேண்டும் என்று இலங்கைப் பிரதமர் குறிப்பிட்டார் என்றும் அந்த அலுவலகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக