சனி, 10 மே, 2014

வெசாக் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடமையில் முப்பதாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள்..!!

வெசாக் தினத்தை முன்னிட்டு முப்பதாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வுகளை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதிலும் வெசாக் தோரணங்கள் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மேலும் குறிப்பாக மோட்டார் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக மட்டும் பத்தாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக