தொடருந்து சாரதிகளின் பாதுகாப்பு தொடர்பில் திங்கட் கிழமைக்குள் உத்தரவாதம் கிடைக்க பெறாவிட்டால், அலுவலக தொடருந்து சேவையை நிராகரிக்கவுள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடருந்து சாரதிகளின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன் எடுக்கப்படவில்லை என தொடருந்து சாரதி சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
குறைந்த பட்சம், தாக்குதல் இடம் பெற்ற தொடருந்து வீதிகளிலாவது
காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, முன் எடுக்கப்படவுள்ள எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளைய தினம் தொடருந்து சாரதிகளின் நிறைவேற்று குழு கூடவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டையிலிருந்து நேற்றிரவு 8.20க்கு சிலாபம் நோக்கி பயணிக்கவிருந்த தொடருந்து ஒரு மணி நேரம் தாமதமாகியே பயணித்துள்ளது.
இதன்காரணமாக, குரன தொடருந்து நிலையத்தில் வைத்து தொடருந்து சாரதி மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று அதிகாலை மாகோவிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி சேவையில் ஈடுப்பட்ட தொடருந்தின் சாரதி மீது பொல்கஹவளையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக