சனி, 10 மே, 2014

அகதிகளை அவதானமாக கையாளுங்கள்!! முன்னாள் இந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவர்.

தமிழகம் அரிசல்முனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளில் மூன்று ஆண்களும் முன்னாள் புலிகளின் போராளிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்களை இந்திய மத்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் அவதானத்துடன் கையாள வேண்டும் என்று, எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவர் கேர்ணல் ஹரிஹரன் இதனைத் தெரிவித்துள்ளார்.


கடந்த ஐந்தாம் திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து 10 பேர் இவ்வாறு அகதிகளாக தமிழகத்தை சென்றடைந்தனர்.

அவர்களில் தாய்மார் இருவரும், அவர்களின் பிள்ளைகளும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

ஏனைய மூன்று ஆண்கள் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் புலிகளின் பேராளிகளான அவர்களை கையாள்வதில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் போராளிகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏன் அவர்கள் யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் தமிழகத்துக்கு அகதிகளாக வருகிறார்கள்? என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக