வியாழன், 8 மே, 2014

டுவிட்டர் ஊடாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதிலளித்துக் கொண்டிருக்கிறார்......!!!!!!!

சமூக வலைத்தளமான டுவிட்டர் ஊடாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதிலளித்துக் கொண்டிருக்கிறார்.
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் சமூக இணையத்தளத்தில், இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜனாதிபதி,

பேஸ்புக்கில் தனக்கு 3 லட்சம் பேரின் விருப்பங்கள் இருப்பதாகவும் டுவிட்டரில் 25 ஆயிரம் பேரின் விருப்பங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி அப்படி இருக்கையில் ஏன் சமூக
வலைத்தளங்களை தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாற்று திறனாளி இளைஞர்களின் வேலைவாய்ப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு,

குறித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சட்ட விதிகள் உள்ளதாகவும் இலங்கை இந்த கொள்கையை கடைபிடிக்கும்.

மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அதற்கைமைய செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் காணப்படும் வேலை வாய்ப்புக்களில் 3% மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என சட்டம் உள்ளதாகவும் மாற்று திறனாளிகளுக்கு 250,000 ரூபா வீட்டுக் கடன் வழங்கப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக