வியாழன், 8 மே, 2014

உயர்கல்விக்கு தகுதி பெறுவோரில் அதிகமானோர் யாழ்.மாவட்டத்திலாம், ஜனாதிபதி தெரிவிப்பு....!!!!

"தற்போது உயர்கல்விக்குத் தகுதி பெறும் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்துதான் வருகின்றார்கள்!" - இப்படிக் கூறியிருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.

ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் கலாநிதி ஜோன் டபிஸ்யூ.ஆஷ், ஹம்பாந்தோட்டையில் நடைபெறும்
15 ஆவது உலக இளைஞர் சர்வதே மாநாட்டில் பங்குபற்ற வந்துள்ளார்.
அவரும் அவரது குழுவினரும் நேற்று புதன்கிழமை காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்தனர். அப்போதே ஜனாதிபதி மேற்கண்ட தகவலை தெரிவித்தார். அச்சம்யம் ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாறு:- "30 வருட யுத்தத்தில் இருந்து மீண்டு நாடு இப்போது அபிவிருத்திப் பாதையில் முன்னேறுகிறது.
12 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். சிறுவர் போராளிகள் எல்லோரும் பெற்றோருடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கணினி அறிவு 2005 இல் ஆக மூன்று வீதமாக இருந்தது. அது இப்போது 55 வீதமாக உயர்ந்துள்ளது. எனினும், அந்நிய சக்திகளின் அதீத தலையீடு நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் இடைஞ்சலாக இருக்கின்றது. இவ்வாறு ஜனாதிபதி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக