வியாழன், 15 மே, 2014

வவுனியாவில் முத்தமிழ் வித்தகர் இளங்கோவடிகள் அவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!! (படங்கள் இணைப்பு)

முத்தமிழ் வித்தகர் இளங்கோவடிகள் அவர்களின் நினைவுதினம் இன்று (15/05) கோயில்குளத்தில் அமைந்துள்ள அவரது   திருவுருவ சிலைக்கு விருந்தினர்களால் மாலை அணிவிக்க பட்டு நினைவு பேருரையும் நடாத்தப்பட்டது. 


இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு. உதயராஜா, வவுனியா நகரசபை முன்னால் உப நகரபிதாவும் கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) , S.N.G நாதன், தமிழ்மணி அகளங்கன், சிவன் கோவில் பரிபாலன சபைத்தலைவர் நவமணி,
அதிபர் வரதராசா,   இந்து இளைஞர் சங்கத் தலைவர் சேனாதிராசா, கவிஞர் மாணிக்கம் ஜெகன், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் திரு.சிவபாலன்,  ஓய்வு பெற்ற வீடமைப்பு திணைக்கள உத்தியோகத்தர் செல்வராஜா, சந்திரகுமார், சிவன் கோவில் பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய  பிரதேச  செயலாளர்  திரு. உதயராஜா, 
வவுனியா மண்  தமிழ் பெரியார்களின் சிலைகள் நிறைந்த நகரமாகவும் இயற்கை அழகினை கொண்டதாகவும் காட்சி அழிப்பது பெருமை அளி க்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளில் மரக்கன்றுகள் நாட்டப்படுவது வரவேற்க்கதக்கதும் இதனை தொடர்ந்து நடை முறைப்படுத்துமாறும் அவர் கேட்டு கொண்டார். கலை காலச்சார நிகழ்வுகளுக்கு நிதி ஒதுக்கபடுவதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து உரையாற்றிய தமிழ் மணி அகளங்கன், இளங்கோவடிகளின் வராலாற்றின் சிறு துணுக்குகளையும் அவரின் சிறப்பு இயல்புகளையும் நன்கு சபைக்கு விளக்கினார். இளங்கோவடிகள் அவர்களின் சிலை உட்பட  தமிழ் பெரியார் சிலைகள் அனைத்தையும் முழு முயற்சியுடன்  வவுனியா நகர் பகுதியிலே நிறுவப்பட்டதன் பெருமை முன்னை நாள் நகரபிதா திரு.G.T லிங்கநாதன்,  உபநகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் நகரசபை உறுப்பினர்களையே சாரும். இளங்கோவடிகளின் சிலையை 1999 ம் ஆண்டு திறந்துவைத்த   முன்னை நாள் உப நகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் இந் நிகழ்வில்  கலந்து கொள்வது எமக்கு பெருமை அளிப்பாதகவும் இந் நிகழ்வை ஒழுங்கமைத்த சிவன் கோவில் பரிபாலன சபைக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார். 

'பூர்வீகம் செய்திகளுக்காக ஓவியன்'





























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக