இலங்கைக்கான ஆறு நாடுகளின் தூதர்கள் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துத் தமது நியமனக் கடிதங்களைக் கையளித்தனர். கொங்கோ, ஆர்ஜென்ரீனா, கொரியக் குடியரசு, பிலிப்பீன்ஸ், பாலஸ்தீனம், எல்சல்வடோர் ஆகிய ஆறு நாடுகளின் தூதுவர்களே தமது நியமனக் கடிதங்களைக் கையளித்தனர். இவர்களில் கொங்கோ, ஆர்ஜென்ரீனா மற்றும் எல்சல்வடோர் தூதுவர்கள் புதுடில்லியிலும், பிலீப்பீன்ஸ் தூதுவர் டாக்காவிலும் தங்கியிருந்து தத்தமது நாட்டினது இலங்கைக்கான தூதுவர்களாகவும் பணியாற்றுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக