விறகு கட்டிக் கொண்டு சைக்கிளில் வந்தவர் சைக்களில் இருந்து வீழ்ந்து மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மரணம் அடைந்த சம்பவம் மல்லாகம் மகா வித்தியாலத்திற்கு அருகாமையில் இடம் பெற்றது. இன்று திங்கட்கிழமை இரவு 7..00மணியளவில் இந்த சம்பவம் காங்கேசன்துறை வீதி மல்லாகத்தில் இடம்பெற்றது. கொலங்லங்கலட்டியைச் சேர்ந்த மாணிக்கவாசகர் வசந்தராஜா (வயது 62) என்பவரே மரணம் அடைந்தவர் என வைத்தியசாலையில் உறவினர்களினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. கொல்லங்கலட்டியைச் சேர்ந்த இவர் இடம்பெயாந்து உரும்பிராயில் தற்போது மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்தார். அவரது சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக