வெள்ளி, 9 மே, 2014

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவர் நியமனம்…!!

உயர் நீதிமன்ற நீதியரசர்களாக மூவர் நேற்று (08.05.2014) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மேன் முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதவான் சிசிர த அப்றூ மேன் முறையீட்டு நீதவான் சரத் த அப்றூ ஜனாதிபதி சட்டத்தரணி பிரயந்த சமரகோன் ஆகியோரே இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்தனர்.

நேற்றுப் பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான டீ.எஸ். விஜேசிங்க, ஆதர் சமரசேகர இக்ராம் மொஹமட்சேனக வல்கம்பாய ஆகியோரும் கலந்துகொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக