வெள்ளி, 9 மே, 2014

வடக்கு மாணவர்களுக்கு சகல வசதிகள் …!! இம்முறை வெளியாகிய க.பொ.தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் சான்று!!

வடக்கிலுள்ள இளைஞர்களும் அனைத்து வசதிகளையும் பெற்று முன்னிலையடைய நாங்கள் பாடுபட்டிருக்கிறோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தெற்கிலுள்ள மாணவர்கள் அனுபவிக்கின்ற தொழில்நுட்ப வசதிகள் அனைத்தையும் வடக்கிலுள்ள மாணவர்களுகம் இப்பொழுது அனுபவிக்கின்றனர்.

இதற்கு நல்ல உதாரணம் இம்முறை வெளியாகிய க.பொ.தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள். இதில் முதல்நிலை பெற்றது வடமாகாண மாணவனே எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக