வெள்ளி, 9 மே, 2014

மோட்டார் சைக்கிள் மதகுடன் மோதியதில் ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்! அரியாலையில் இன்று மாலை சம்பவம்!!

யாழ்ப்பாணம், அரியாலை மாம்பழம் சந்தியில் இன்று வியாழக்கிழமை மாலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றுமொருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதகு ஒன்றுடன் மோதிப் படுகாயமடைந்தனர். இருவரும் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

எனினும், அரியாலை நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த சுரேஸ்வரன் சுரேகன் (வயது - 23) என்பவர் உயிரிழந்தார். ஐங்கரநேசன் கரன் (வயது 21) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக